மாதவன் - அனுஷ்காவின் ‘நிசப்தம்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மாதவன் - அனுஷ்கா நடித்துள்ள ‘நிசப்தம்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சைலன்ஸ்’. இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். தமிழில் இந்தப் படத்துக்கு ‘நிசப்தம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சஸ்பென்ஸ் த்ரில்லரான இந்தப் படம், வசனமே இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது. கோபி மோகன் மற்றும் கோனா வெங்கட் இருவரும் இணைந்து இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர். மேலும், இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராகவும் கோனா வெங்கட் பணியாற்றுகிறார்.

இதில், மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜு ஆகியோர் நடித்துள்ளனர். ‘ரெண்டு’ தமிழ்ப் படத்துக்குப் பிறகு மாதவன் - அனுஷ்கா இணைந்து நடிக்கும் படம் இது. ‘ரெண்டு’ படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவுக்கு அனுஷ்கா அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டனி என்ற நட்சத்திர இசையமைப்பாளர் கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்க, அவருடன் சேர்ந்து ஹாலிவுட் நடிகர்களும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். கடந்த வருடம் (2018) மார்ச் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. அமெரிக்காவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், ஏப்ரல் 2-ம் தேதி படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் இந்தப் படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இதை ‘மிஸ்’ பண்ணிடாதீங்க...

விநியோகஸ்தர்கள் நடிக்கவா வந்துள்ளனர்? - ‘தர்பார்’ நஷ்டம் குறித்து டி.ராஜேந்தர் காட்டம்
‘ஆதித்ய வர்மா’வில் நடித்த விக்ரம்: த்ருவ் விக்ரம் வெளியிட்ட வீடியோ
‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவில் தளபதி பேச்சுக்காகக் காத்திருக்கிறேன்: மலையாள நடிகர் ட்வீட்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE