என் படங்களையே ஏன் நினைவுபடுத்த வேண்டும்? - மிஷ்கின்

By செய்திப்பிரிவு

என் படங்களையே ஏன் நினைவுபடுத்த வேண்டும் என்று இயக்குநர் மிஷ்கின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் நடிப்பில் வெளியாகவுள்ள படம் 'சைக்கோ'. இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தினை டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படம் உலகமெங்கும் நாளை (ஜனவரி 24) வெளியாகவுள்ளது.

'சைக்கோ' படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில், தனது படங்களையே தான் நினைவுபடுத்துவதில்லை என்று தெரிவித்துள்ளார் மிஷ்கின். இது தொடர்பாக, "நான் ஏன் என் படங்களையே மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். அது கடந்தகாலம், அதை நான் எதுவும் செய்ய முடியாது.

'துப்பறிவாளன் 2' எடுக்கும்போதும் கூட நான் முதல் பாகத்தைப் பார்க்கவில்லை. விஷால், உதய், அதிதி, நித்யாமேனன் ஆகியோரின் எந்தப் படங்களையும் நான் இதுவரை பார்த்ததில்லை. எனவே அவர்களைப் பற்றிய எந்த முன் தீர்மானமும் என்னிடம் இருக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார் மிஷ்கின்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 mins ago

வணிகம்

16 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

26 mins ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

50 mins ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

53 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

மேலும்