'விக்கி டோனர்' ரீமேக்கான 'தாராள பிரபு' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

'விக்கி டோனர்' படத்தின் தமிழ் ரீமேக்கான 'தாராள பிரபு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்

ஆயுஷ்மான் குரானா நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற படம் இந்திப் படம் ‘விக்கி டோனர்’. ஷூஜித் சர்கார் இயக்கிய இந்தப் படம்தான், ஆயுஷ்மான் குரானா நடித்த முதல் படம். நடிகர் ஜான் ஆப்ரஹாம் தயாரித்த இந்தப் படம், 2012-ம் ஆண்டு ரிலீஸானது.

நாயகியாக யாமி கெளதம் நடிக்க, அன்னு கபூர், கம்லேஷ் கில், பூஜா குப்தா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். ரொமான்டிக் காமெடி வகையைச் சேர்ந்த இந்தப் படம், விந்து தானம் மற்றும் குழந்தைப் பேறின்மை ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

பாக்ஸ் ஆபீஸில் வசூலைக் குவித்தது மட்டுமன்றி, 3 தேசிய விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளையும் பெற்றது. ‘ஸ்டார்பக்’ என்ற கனடா படத்தைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் தொடர்பான பேச்சுவார்த்தை நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது.

இறுதியாக ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்க, நாயகனாக நடிக்க ஒப்பந்தமானார் ஹரிஷ் கல்யாண். தான்யா ஹோப் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் விவேக் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். கிருஷ்ணா மாரிமுத்து இயக்கவுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அனிருத் வெளியிட்டுள்ளார்.

'தாராள பிரபு' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட்டு, ஒரே கட்டமாக முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சுற்றுலா

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்