தமிழ்ப் புத்தாண்டு வெளியீடு: 'மாஸ்டர்' vs ’சூரரைப் போற்று’

By செய்திப்பிரிவு

தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' மற்றும் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' ஆகிய படங்கள் போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது.

பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே தேதியில் வெளியாவதைக் கூடியதானவரைப் பேசித் தள்ளிவைத்து விடுவார்கள். ஆனால், தற்போது விஜய் - சூர்யா இருவரின் படங்கள் ஒரே தேதியில் வெளியாகும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கு முன்பு 'வேலாயுதம்' - 'ஏழாம் அறிவு' ஆகிய படங்கள் ஒருநாள் இடைவெளியில் 2011-ம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாஸ்டர்'. இதுவரை 60% வரை படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தற்போது சென்னையில் பிரம்மாண்டமான ஜெயில் அரங்கம் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள். இதில் விஜய் - விஜய் சேதுபதி இருவரும் மோதும் சண்டைக்காட்சி ஒன்றைப் படமாக்கவுள்ளனர்.

ஜனவரிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து, இறுதிக்கட்டப் பணிகளைத் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். கோடை விடுமுறை வெளியீடு என்று முதலில் இருந்தே இந்தப் படம் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது.

மேலும், சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் 'சூரரைப் போற்று'. சூர்யா மற்றும் குனீத் மோங்கா இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஜனவரி 7-ம் தேதி படத்தின் டீஸரை வெளியிடவுள்ளது படக்குழு. இந்தப் படம் முதலில் பொங்கல் வெளியீட்டுக்குத் திட்டமிடப்பட்டது.

ஆனால், இறுதிக்கட்டப் பணிகள் முடிவடையாத காரணத்தால் ஏப்ரல் வெளியீட்டுக்கு ஒத்தி வைத்தார்கள். தற்போது இந்தப் படமும் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகும் சூழல் உருவாகியுள்ளது.

ஏன் இரண்டு படங்களுமே ஏப்ரல் 9-ம் தேதியைத் தேர்ந்தெடுத்துள்ளது என்றால், தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை வருகிறது. மேலும், கோடை விடுமுறை தொடங்கும் சமயம் என்பதால் ஒட்டுமொத்தமாக கல்லாகட்டத்தான் களமிறங்குகிறார்கள். ஆனால், இரண்டு படங்களுக்குமே நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால் விநியோகஸ்தர்கள் எதற்கு முன்னுரிமை அளிப்பது என்று தயக்கம் காட்டி வருகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்