காதலை உறுதி செய்த விஷ்ணு விஷால்

By செய்திப்பிரிவு

ஜுவாலா கட்டா மீதான காதலை நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் உறுதி செய்துள்ளார்.

'சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தைத் தொடர்ந்து 'ஜகஜால கில்லாடி' படத்தை முடித்துள்ளார் விஷ்ணு விஷால். தற்போது 'எஃப்.ஐ.ஆர்' எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தைத் தயாரித்து, அதில் நாயகனாக நடித்து வருகிறார்.

இவருக்கும் ரஜினிக்கும் திருமணமாகி ஆர்யன் என்ற மகன் இருக்கிறார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக ரஜினிக்கும் விஷ்ணுவுக்கும் விவாகரத்து ஏற்பட்டது. 2018-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி விவாகரத்து ஆகிவிட்டதை உறுதி செய்தார் விஷ்ணு விஷால்.

அதனைத் தொடர்ந்து அவ்வப்போது பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து வந்தார். இருவரும் நண்பர்கள் என்று நினைத்தாலும், சிலர் இருவரும் காதலித்து வருகிறார்கள் எனத் தெரிவித்து வந்தார்கள்.

இந்நிலையில், ஜனவரி 1-ம் தேதி இருவருமே தாங்கள் காதலித்து வருவதை உறுதி செய்துள்ளனர். தனக்கு விஷ்ணு விஷால் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை ஜுவாலா கட்டா தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து, "எனது பேபி.. புத்தாண்டு வாழ்த்துகள் 2020" எனச் செல்லமாகக் குறிப்பிட்டார் . இதனை விஷ்ணு விஷால் ரீ-ட்வீட் செய்தார்.

இதைப் போன்ற மற்றொரு புகைப்படத்தை ஜுவாலா கட்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது. ஜுவாலா கட்டாவும் திருமணமாகி விவாகரத்துப் பெற்றவர் என்பது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

11 mins ago

விளையாட்டு

18 mins ago

ஜோதிடம்

47 mins ago

தமிழகம்

37 mins ago

விளையாட்டு

56 mins ago

சினிமா

57 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்