பொங்கல் விடுமுறை: சன் டிவியின் அதிரடி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

இம்முறை பொங்கல் விடுமுறை 5 நாட்கள் வருவதால், அதிரடி அறிவிப்பை சன் டிவி வெளியிட்டுள்ளது.

2020-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ம் தேதி (புதன்கிழமை) தொடங்கி, ஜனவரி 19-ம் தேதி (ஞாயிறு) வரை விடுமுறை வருகிறது. இந்த 5 நாட்களுக்கும் முன்னணித் தொலைக்காட்சியினர் புதிய படங்களை ஒளிபரப்பத் திட்டமிடுவார்கள்.

தற்போது இந்த 5 நாட்கள் விடுமுறைக்கான படங்கள் பட்டியலை, இன்று (ஜனவரி 1) முதலே சன் டிவி விளம்பரப்படுத்தத் தொடங்கிவிட்டது. விஜய் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற 'பிகில்' படம் ஜனவரி 15-ம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. தீபாவளிப் பண்டிகையின் போது வெளியான படம் என்றாலும் தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்றியுள்ளதால் உடனடியாக 'பிகில்' ஒளிபரப்பாக இருப்பது குறிப்பிடத்ததக்கது.

ஜனவரி 16-ம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'நம்ம வீட்டுப் பிள்ளை', ஜனவரி 17-ம் தேதி விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'சங்கத்தமிழன்', ஜனவரி 18-ம் தேதி அஜித் நடித்த 'விஸ்வாசம்' மற்றும் ஜனவரி 19-ம் தேதி ரஜினி நடித்த 'பேட்ட' என 5 நாட்களுக்கு 5 புதிய படங்களை சன் டிவி ஒளிபரப்பவுள்ளது.

சன் டிவியின் இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஏனென்றால், முதல் 3 நாட்கள் திரையிடப்படும் படங்கள் அனைத்துமே சமீபமாக வெளியான படங்கள் என்பதால் கண்டிப்பாகப் பெரிய அளவில் டிஆர்பியைப் பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

51 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்