அஜித்தின் ‘வலிமை’ அப்டேட்: இசையமைப்பாளர் யார்?

By செய்திப்பிரிவு

அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த உறுதியான தகவல் கிடைத்துள்ளது.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித். ‘வலிமை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தையும் ஜீ ஸ்டுடியோஸ் சார்பில் போனி கபூரே தயாரித்து வருகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார்.

கடந்த அக்டோபர் 10-ம் தேதி இந்தப் படத்தின் பூஜை நடைபெற்றது. முதற்கட்டப் படப்பிடிப்பை, ஹைதராபாத்தில் கடந்த 13-ம் தேதி தொடங்கத் திட்டமிட்டது படக்குழு. ஆனால், அரங்குகள் தயாராகாத காரணத்தால் ஒருநாள் கழித்து 14-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

அதில், ஒரு சண்டைக் காட்சி மற்றும் சில காட்சிகளையும் படமாக்கி முடித்துவிட்டு, சென்னை திரும்பியுள்ளது படக்குழு. அடுத்தகட்டப் படப்பிடிப்பு, சென்னையில் ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது. இங்கு சில காட்சிகளை எடுத்தபிறகு, பொங்கல் முடிந்தவுடன் ஹைதராபாத்தில் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இதில்தான் படத்தின் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

‘வலிமை’ படத்தில் அஜித்துடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதை, படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. யாமி கெளதம்தான் நாயகி என்று தகவல் வெளியாகியுள்ளது. அதையும் இன்னும் படக்குழு உறுதிப்படுத்தவில்லை.

இந்தப் படத்துக்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என ஆரம்பத்தில் இருந்தே சொல்லப்பட்டு வந்தது. ஆனால், திடீரென டி.இமான் இசையமைக்கிறார் எனத் தகவல் வெளியானது. இதுகுறித்து படக்குழுவிடம் விசாரித்தபோது, வெளியான தகவலில் உண்மையில்லை, வெறும் வதந்தி எனத் தெரியவந்துள்ளது. எனவே, ‘வலிமை’ படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பது உறுதியாகியுள்ளது.

போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்கும் இந்தப் படம், அடுத்த ஆண்டு (2020) தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

11 mins ago

சினிமா

15 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

29 mins ago

இந்தியா

19 mins ago

சினிமா

37 mins ago

இந்தியா

51 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்