நாயகனாகும் லெஜண்ட் சரவணன்: படப்பூஜையுடன் பணிகள் தொடக்கம்

By செய்திப்பிரிவு

லெஜண்ட் சரவணன் நாயகனாக நடிக்கும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளன.

தொலைக்காட்சியில் அடிக்கடி வரும் விளம்பரங்களில் ஒன்று லெஜண்ட் சரவணா ஸ்டோர் விளம்பரம். முன்பு அதில் முன்னணி நடிகர்கள் நடித்தார்கள். ஆனால், தற்போதைய விளம்பரங்களில் அதன் உரிமையாளரான லெஜண்ட் சரவணனே நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அவர் படங்களில் நாயகனாக நடிக்க முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியானது.

தற்போது அந்தப் படத்தின் பூஜை இன்று (டிசம்பர் 1) சென்னையில் நடைபெற்றுள்ளது. லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களை இயக்கிய ஜேடி - ஜெர்ரி இணை, லெஜண்ட் சரவணன் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளது. இந்தப் படத்தை அவரே தயாரிக்கவுள்ளார்.

இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளராக வேல்ராஜ் மற்றும் எடிட்டராக ரூபன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இதற்கான பாடல் பதிவு அனைத்தையும் ஹாரிஸ் ஜெயராஜ் முடித்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் நாயகியாக புதுமுகம் ஒருவர் நடிக்கவுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற இந்தப் படத்தின் பூஜையில் பிரபு, விவேக் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தில் அவர்கள் நடிக்கவுள்ளார்களா, அல்லது படப்பூஜையில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்களா என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் எனத் தெரிகிறது. படப்பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து லெஜண்ட் சரவணனுக்கு பலரும் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்