சதீஷ் திருமணம் காதல் திருமணமா? 

By செய்திப்பிரிவு

டிசம்பர் 11-ம் தேதி நடைபெறவுள்ள நடிகர் சதீஷின் திருமணம் காதல் திருமணம் அல்ல என்பது தெரிய வந்துள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சதீஷ். நீண்ட நாட்களாக இவருக்குத் திருமணம் செய்து வைக்க, பெண் பார்க்கும் படலம் நடைபெற்று வந்தது. இறுதியில் 'சிக்சர்' இயக்குநரின் தங்கை சிந்துவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

'சிக்சர்' படத்தில் சதீஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால், இந்த திருமணம் காதல் திருமணம் என்று பலரும் செய்திகள் வெளியிட்டு வந்தனர். சதீஷ் - சிந்து திருமணம் டிசம்பர் 11-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

இணையத்தில் பலருமே சதீஷ் காதல் திருமணம் என்று செய்திகள் வெளியிட்டு வந்த நிலையில், 'சிக்சர்' இயக்குநர் தனது ட்விட்டர் பக்கத்தில் "இது உண்மையான நிச்சயக்கப்பட்ட திருமணம்" என தெரிவித்துள்ளார். மேலும், சதீஷ் - சிந்து இருவரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

இந்தப் பதிவால் சதீஷின் திருமணம் காதல் திருமணம் அல்ல என்பது உறுதியாகியுள்ளது. சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரில் திருமண அழைப்பிதழைக் கொடுத்தார் சதீஷ். தற்போது தனது திரையுலக நண்பர்களுக்குத் திருமண அழைப்பிதழைக் கொடுத்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

22 mins ago

இந்தியா

20 mins ago

வாழ்வியல்

39 mins ago

சுற்றுலா

42 mins ago

வணிகம்

6 hours ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்