டிசம்பர் 6-ம் தேதி வெளியாகிறது சீறு

By செய்திப்பிரிவு

ரத்னசிவா இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள 'சீறு' திரைப்படம் டிசம்பர் 6-ம் தேதி வெளியாகவுள்ளது.

'கொரில்லா' மற்றும் 'ஜிப்ஸி' படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு, ரத்னசிவா இயக்கத்தில் உருவான 'சீறு' படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் ஜீவா. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி பல்வேறு ஊர்களில் நடைபெற்று வந்தது.

முழு படப்பிடிப்பும் முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தது படக்குழு. தற்போது டிசம்பர் 6-ம் தேதி படத்தை வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளனர். விரைவில் டீஸர் மற்றும் பாடல்கள் ஆகியவற்றை வெளியிட்டு, படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கவுள்ளன.

இதில் நவ்தீப், சதீஷ், ரியா சுமன், காயத்ரி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் ஜீவாவுடன் நடித்துள்ளனர். இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு பிரசன்ன குமார் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்துள்ளார். சமூகத்துக்குத் தேவையான ஒரு விஷயத்தை முழுக்க கமர்ஷியல் பாணியில் இயக்குநர் ரத்னசிவா உருவாக்கியிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, இந்தியில் ரன்வீர் சிங்குடன் நடித்து வரும் '83' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ஜீவா. இதன் படப்பிடிப்பு லண்டனில் நீண்ட நாட்கள் நடைபெற்றது. 1983-ம் ஆண்டு இந்திய அணி வென்ற உலகக் கோப்பை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

4 mins ago

ஜோதிடம்

8 mins ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்