ஆர்.ஜே. பாலாஜி - நயன்தாரா இணையும் மூக்குத்தி அம்மன்

By செய்திப்பிரிவு

ஆர்.ஜே. பாலாஜி இயக்கி நடிக்கும் 'மூக்குத்தி அம்மன்' படத்தில் நயன்தாரா பிரதான நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக நடித்து வெளியான 'எல்.கே.ஜி' திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை தனது நண்பர்களுடன் அமர்ந்து உருவாக்கியிருந்தார் ஆர்.ஜே. பாலாஜி. இந்தப் படத்தைத் தயாரித்த வேல்ஸ் நிறுவனம், அடுத்த படத்தையும் தங்களுடைய நிறுவனத்துக்கே செய்யுமாறு ஆர்.ஜே. பாலாஜிக்கு அட்வான்ஸ் கொடுத்தது.

இந்தப் படத்துக்கான கதையை நாகர்கோவிலில் தனது நண்பர்களுடன் அமர்ந்து எழுதத் தொடங்கினார் ஆர்.ஜே. பாலாஜி. இந்தக் கதையில் அவரே நாயகனாக நடித்து இயக்கவும் முடிவு செய்துள்ளார். அவரோடு இணைந்து என்.ஜே.சரவணனும் இயக்குநர் பொறுப்பைக் கவனிக்கவுள்ளார்.

ஆர்.ஜே. பாலாஜி - என்.ஜே.சரவணன் இருவருமே 'எல்.கே.ஜி' படத்தில் முதல்நிலை உதவி இயக்குநர்களாக பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 'மூக்குத்தி அம்மன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக நடிக்கவுள்ளார்.

நயன்தாரா மீதுதான் முழுக்கதையும் பயணிப்பது போல் உருவாக்கியுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்தனர். டிசம்பர் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கி கோடை விடுமுறைக்கு வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய படத்தின் அறிவிப்பை நேற்று (நவம்பர் 10) நடைபெற்ற இந்தியா - வங்கதேச அணிகள் மோதிய 3-வது டி20 கிரிக்கெட் போட்டி வர்ணனையில் அறிவித்தார் ஆர்.ஜே. பாலாஜி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

46 mins ago

ஜோதிடம்

49 mins ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்