ட்விட்டர் தளத்தில் 'கத்தி' படம் ட்ரெண்டானது ஏன்?

By செய்திப்பிரிவு

ட்விட்டர் தளத்தில் விஜய் நடித்த 'கத்தி' திரைப்படம் இந்திய அளவில் ட்ரெண்டானதற்கு காரணம் என்னவென்று தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி, நயன்தாரா, சுனில் ஷெட்டி, பிரதீக் பார்பர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தர்பார்'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் தீம் மியூசிக் உடன் கூடிய மோஷன் போஸ்டர் நேற்று (நவம்பர் 7) வெளியிடப்பட்டுள்ளது.

அனிருத் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். 'தர்பார்' படத்தின் தீம் மியூசிக்கை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். இதனிடையே, விஜய் ரசிகர்களோ ஏ.ஆர்.முருகதாஸ் - அனிருத் கூட்டணியில் உருவான 'கத்தி' படத்தின் தீம் மியூசிக் மற்றும் மோஷன் போஸ்டரே எப்போதும் சிறந்தது என்று கருத்துகள் தெரிவிக்கத் தொடங்கினார்கள்.

இதனால் யூ டியூப் சேனலில் 'கத்தி' படத்தின் மோஷன் போஸ்டருக்கான பார்வைகளும் அதிகமானது. ’கத்தி’ என்ற பெயரும் தமிழக அளவில் ட்ரெண்டாகத் தொடங்கி, இந்திய அளவுக்கு வந்தது. பலரும் அனிருத்தின் சிறந்த தீம் மியூசிக் என்றால் 'கத்தி' படத்துக்குத் தான் என்றும், தமிழ் சினிமாவிலும் அதுதான் சிறந்தது என்றும் கருத்து தெரிவித்தார்கள்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கத்தி'. 2014-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

'கத்தி' படத்துக்கான தீம் மியூசிக்குடன் கூடிய மோஷன் போஸ்டர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

4 hours ago

மேலும்