நந்தினிக்கு திருமண நிச்சயதார்த்தம்: காதலரை கரம் பிடிக்கிறார்

By செய்திப்பிரிவு

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' என்ற தொடரில் மைனா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நந்தினி. தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டே 'வெண்ணிலா கபடிக் குழு', 'வம்சம்' மற்றும் சமீபத்தில் வெளியான 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகேயன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் நந்தினி. ஆனால், திருமணமான சில நாட்களிலேயே இருவருக்குமிடையே மனக்கசப்பு ஏற்பட்டுப் பிரிந்தனர். தனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளால் கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டார்.

கார்த்திகேயன் மறைவிலிருந்து மீண்டு, நாடகங்களிலும், படங்களிலும் கவனம் செலுத்தி வந்தார் நந்தினி. அவருக்கும் 'நாயகி' உள்ளிட்ட சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த யோகேஸ்வரனுக்கும் காதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதனைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் நந்தினி.

சில மாதங்களாகவே இருவருமே ஒன்றாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வந்தன. அப்போதே இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற செய்தி வெளியானது நினைவு கூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

58 secs ago

தமிழகம்

13 mins ago

சினிமா

42 mins ago

க்ரைம்

23 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

36 mins ago

தொழில்நுட்பம்

18 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்