கவனம் கொடுத்த ‘கைதி’: ‘இந்தியன் 2’வில் இணைந்த ஜார்ஜ் மரியான்?

By செய்திப்பிரிவு

‘கைதி’ படத்தில் கவனிக்கவைத்த ஜார்ஜ் மரியான், தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளியான படம் ‘கைதி’. ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தப் படம், ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ‘மாநகரம்’ படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் என்பதால், படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளதாகவே பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்த இந்தப் படத்துக்கு, சத்யன் - சூர்யன் ஒளிப்பதிவு செய்தனர். சாம் சி.எஸ். இசையமைக்க, பிலோமின் ராஜ் எடிட் செய்தார். நரேன், தீனா, ஜார்ஜ் மரியான், ஹரீஷ் உத்தமன், ஹரீஷ் பெராடி, ரமணா, அர்ஜுன் தாஸ், வத்சன் சக்கரவர்த்தி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

இந்தப் படத்தில் கார்த்தியின் நடிப்பு கொண்டாடப்படும் அதேசமயத்தில், தீனா, ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ் போன்றவர்களின் நடிப்பும் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, நெப்போலியன் என்ற பெயரில் போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்த ஜார்ஜின் நடிப்பைப் பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

நாடக நடிகரான ஜார்ஜ், ‘அழகி’ படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர். இவருடைய நடிப்பால் கவரப்பட்ட இயக்குநர் ஏ.எல்.விஜய், ‘மதராசப்பட்டினம்’, ‘தெய்வத் திருமகள்’, ‘சைவம்’ என தொடர்ந்து தன்னுடைய படங்களில் நடிக்க வாய்ப்பு வழங்கினார்.

‘கைதி’ படம், ஜார்ஜின் புதிய பரிமாணத்தை எடுத்துக் காட்டியுள்ளது. இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவரும் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க ஜார்ஜ் ஒப்பந்தமாகியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கமலின் ‘விருமாண்டி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து, சில காரணங்களால் ஜார்ஜால் நடிக்க முடியவில்லை. பல வருடங்கள் கழித்து கமல் படத்தில் நடிக்க தற்போது வாய்ப்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்