'பிகில்' படத்துடன் போட்டி: கார்த்தி பதில்

By செய்திப்பிரிவு

'பிகில்' படத்துக்குப் போட்டியாக 'கைதி' வெளியாவது குறித்து கார்த்தி பதில் அளித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கைதி'. அக்டோபர் 25-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் பாடல்கள் மற்றும் நாயகி என எதுவுமே இல்லை. மேலும், 10 வயது பெண் குழந்தைக்கு அப்பாவாக நடித்துள்ளார் கார்த்தி. 10 வருட சிறைவாசம் அனுபவித்த கதாபாத்திரத்தில், இதுவரை தனது பெண் குழந்தையைப் பார்க்காத ஏக்கத்தில் இருப்பவராகவும் நடித்துள்ளார் கார்த்தி.

10 வயது பெண் குழந்தைக்கு அப்பாவாக நடித்திருப்பது குறித்து கார்த்தி, "வயதான கதாபாத்திரத்தில் நடிப்பது பற்றி கவலையில்லை. எனக்கு இப்போது மகள் இருக்கிறாள் என்பதால் என்னால் அந்த உணர்வுகளை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு குழந்தை இருக்கும்போது, உங்களுக்கு எல்லாம் அந்தக் குழந்தைதான் " என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தப் படத்தில் முதன்முறையாக லாரி ஓட்டியுள்ளார் கார்த்தி. அது தொடர்பாக "லாரி ஓட்டுவது கடினமாக இருந்தது. அதுவும் பழைய லாரி. பாதுகாப்புக்காக ஒன்றும் இல்லை. சீட் பெல்ட், தலைக்குப் பாதுகாப்பு என எதுவும் கிடையாது. இதில் நடித்த பிறகு லாரி டிரைவர்கள் மீது பச்சாதாபம் ஏற்படுகிறது. இது ஏன் மிகவும் ஆபத்தான வேலை என்பது புரிகிறது" என்று கூறியுள்ளார் கார்த்தி.

அக்டோபர் 25-ம் தேதி 'பிகில்' படத்துக்குப் போட்டியாக 'கைதி' வெளியாவது தொடர்பான கேள்விக்கு கார்த்தி பதில் அளிக்கையில், " 'பிகில்' தான் எப்படியும் பெரிய படம். அதனால்தான் அதற்கு நிறைய அரங்குகள் கிடைக்கும். ஆனால் 'கைதி' படத்துக்கும் கணிசமான திரைகள் கிடைக்கும் என்று நினைக்கிறேன். 'பேட்ட' - 'விஸ்வாசம்' ஒன்றாக வெளியாகும்போது, 'பிகில்' - 'கைதி' கூட எளிதில் வெளியாகலாமே” என்றார்.

'கைதி' படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான படத்தையும் முடித்துக் கொடுத்துள்ளார் கார்த்தி. தற்போது இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் 'சுல்தான்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்