விஜய் இடத்தில் வருண்: 'யோஹன்' 50% படப்பிடிப்பு நிறைவு

By செய்திப்பிரிவு

கெளதம் மேனன் இயக்கத்தில் வருண் நடித்து வரும் படம் 'யோஹன்: அத்தியாயம் ஒன்று' தான் என்கிறார்கள் தமிழ்த் திரையுலகில்.

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. நவம்பர் 15-ம் தேதி வெளியாகும் என கல்லூரி விழா ஒன்றில் கெளதம் மேனன் அறிவித்துள்ளார்.

'துருவ நட்சத்திரம்' படத்துக்கு இன்னும் 15 நாட்கள் வரை படப்பிடிப்பு இருக்கிறது. அவை 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் வெளியானவுடன், தொடங்கப்படும் எனத் தெரிகிறது. இதனிடையே பல வருடங்களுக்கு முன் விஜய் நடிக்க, கெளதம் மேனன் இயக்கத்தில் 'யோஹன்: அத்தியாயம் ஒன்று' என்ற திரைப்படம் தொடங்கப்பட்டது. படப்பிடிப்புக்குச் செல்லவில்லை என்றாலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்று அறிவித்து, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் வெளியிட்டார்கள்.

ஆனால், அந்தப் படம் கைவிடப்பட்டது. பல ஆண்டுகள் கழித்து 'யோஹன்: அத்தியாயம் ஒன்று' மீண்டும் தொடங்கப்படுமா என்ற கேள்விக்கு "’யோஹன்’ படத்தைப் பொறுத்தவரை மிகவும் ஆங்கில படப்பாணியில் இருக்கிறது. தமிழ்ப் படத்துக்கான விஷயங்கள் இந்தப் படத்தில் இல்லை என்று விஜய் எண்ணினார். அப்படத்திலிருந்த சில விஷயங்கள் தற்போது நிறையப் படங்கள் வந்துவிட்டன. ஆகையால் மறுபடியும் ’யோஹன்’ உருவாகுமா எனத் தெரியவில்லை" என்றார் கெளதம் மேனன்.

இந்நிலையில், தற்போது வேல்ஸ் நிறுவனத்துக்காக புதிய படமொன்றைச் சத்தமின்றி இயக்கி வருகிறார் கெளதம் மேனன். அது 'யோஹன்: அத்தியாயம் ஒன்று' படத்தின் கதை என்கிறார்கள் திரையுலகில். இதில் சமீபத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ள வருண் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் துணை நடிகராக நடித்த அருண் சமீபத்தில் வெளியான 'பப்பி' படத்தில் ஹீரோவாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

வருணுக்குத் தகுந்தமாதிரி சிறுசிறு மாற்றங்கள் செய்து சுமார் 50% படப்பிடிப்பை முடித்துவிட்டாராம் கெளதம் மேனன். கண்டிப்பாக இது வருணை நாயகர்கள் வரிசையில் முக்கியமான இடத்தில் கொண்டு வரும் எனக் கூறுகிறார்கள். இந்தப் படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேசியுள்ளார் கெளதம் மேனன். ஆனால், இன்னும் ஏ.ஆர்.ரஹ்மான் சம்மதம் தெரிவிக்கவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

42 mins ago

ஜோதிடம்

45 mins ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்