படத்துக்கு வரவேற்பு: 'அசுரன்' படக்குழுவினருக்கு தாணு பரிசு 

By செய்திப்பிரிவு

'அசுரன்' படத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளதைத் தொடர்ந்து, படக்குழுவினருக்கு தங்கக் காசுகள் மற்றும் பரிசுத் தொகையை தயாரிப்பாளர் தாணு வழங்கியுள்ளார்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'அசுரன்'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தாணு தயாரித்துள்ளார். இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து காலை சிறப்புக் காட்சிகளும் மற்றும் பல்வேறு ஊர்களில் திரையரங்குகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால், தயாரிப்பாளர் தாணு பெரும் மகிழ்ச்சியில் உள்ளார். இதனைத் தொடர்ந்து படத்தின் உதவி இயக்குநர்களுக்கும், உதவி ஒளிப்பதிவாளர்களுக்கும் பரிசுகள் வழங்கியுள்ளார்.

உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்ட 50 பேருக்கு தங்கக் காசுகள் வழங்கியுள்ளார் வெற்றிமாறன். மேலும், உதவி இயக்குநர்கள் ஒவ்வொருவருக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் தாணு. இதனால் 'அசுரன்' படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

‘அசுரன்’ படத்தைத் தொடர்ந்து சூரி நாயகனாக நடிக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் வெற்றிமாறன். இந்தப் படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கவுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்