டப்பிங் தியேட்டர் கட்டும் அஜித்

By செய்திப்பிரிவு

புதிதாக டப்பிங் தியேட்டர் ஒன்றைக் கட்டி வருகிறார் அஜித். இனிமேல் தன் படங்களுக்கான டப்பிங் பணிகளை அங்கேயே மேற்கொள்வார் எனத் தெரிகிறது.

எப்போதுமே அஜித் எங்கு சென்றாலும், அவருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது வழக்கம். இதனாலேயே, அவருடைய படங்களின் படப்பிடிப்பு முடிந்தவரை தமிழகத்தில் நடைபெறுவதில்லை. அதிகமான ரசிகர்கள் கூட்டம் கூடுவதுதான் காரணம்.

தற்போது அவர் நடிப்பில் உருவாகும் படங்கள் அனைத்துமே அரங்குகள் அமைத்துப் படப்பிடிப்பு என்றால் ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலும், வெளிப்புறப் படப்பிடிப்பு என்றால் ராஜமுந்திரியிலும் நடைபெற்று வருவது வழக்கம். சென்னையில் திரையுலகம் சார்ந்து, தன் படங்களின் டப்பிங் பணிகளுக்காக மட்டுமே அஜித் வெளியே வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதுவும் இரவில் தான் அஜித் டப்பிங் பணிகளை மேற்கொண்டு வந்தார். அப்போது கூட ரசிகர்கள் கூட்டம் ஒன்றுகூடி புகைப்படங்கள் எடுத்து வந்தனர். தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அஜித், தன் வீட்டுக்குள்ளேயே சொந்தமாக டப்பிங் தியேட்டர் ஒன்றைக் கட்டி வருகிறார்.

இதன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இனிவரும் படங்களுக்கான டப்பிங் பணிகள் அனைத்தும் இங்கேயே நடக்கும் எனத் தெரிகிறது. 'நேர்கொண்ட பார்வை' படத்துக்குப் பிறகு மீண்டும் ஹெச்.வினோத் இயக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். இதனையும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்க போனி கபூர் தயாரிக்கவுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்