'தல 60' அப்டேட்: ஹெச்.வினோத்துக்கு அஜித் பரிந்துரை

By செய்திப்பிரிவு

'தல 60' படம் தொடர்பாக இயக்குநர் ஹெச்.வினோத்துக்கு அஜித் பரிந்துரை செய்துள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'நேர்கொண்ட பார்வை'. யுவன் இசையமைத்த இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார். போனி கபூர் தயாரித்திருந்தார்.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தைத் தொடர்ந்து, மீண்டும் அஜித் - ஹெச்.வினோத் கூட்டணி இணைந்து படம் எடுக்கவுள்ளனர். இதையும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து போனி கபூரே தயாரிக்கவுள்ளார்.

இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. காவல்துறை அதிகாரியாக இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். விரைவில் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இதனிடையே, இந்தப் படத்தின் கதையை முழுமையாக முடித்து அஜித்திடம் கூறியுள்ளார் ஹெச்.வினோத். கதை அருமையாக இருக்கிறது. எனது முந்தைய 2 படங்களுமே பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தக் கதையும் நன்றாக இருக்கிறது.

ஆனால், கொஞ்சம் குடும்ப சென்டிமெண்ட் மற்றும் எமோஷனல் காட்சிகள் குறைவாகவுள்ளது. அதை மட்டும் இந்தக் கதையில் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்கள் என ஹெச்.வினோத்துக்கு அஜித் பரிந்துரை செய்துள்ளார். தற்போது இந்தக் கதையில் அதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டார் ஹெச்.வினோத்.

விரைவில் இதன் பணிகளை முடித்துவிட்டு, படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

51 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்