சசிகுமாரின் 'பரமகுரு' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படத்துக்கு 'பரமகுரு’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

'கென்னடி கிளப்' படத்தைத் தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் 'நாடோடிகள் 2', 'கொம்பு வச்ச சிங்கம்டா', 'ராஜவம்சம்', 'நா நா' உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகின்றன. இதனைத் தொடர்ந்து பெயரிடப்படாமல் உள்ள சில படங்களில் நடித்து வருகிறார் சசிகுமார்.

இதில் புதுமுக இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமாரின் படமும் அடங்கும். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

’பரமகுரு’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஜபக் தயாரித்துள்ளார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ரோனி ராஃபில் இசையமைத்துள்ளார். இதில் சசிகுமாருடன் குரு சோமசுந்தரம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முழுக்க விசாரணைக் கோணத்தில் நடைபெறும் த்ரில்லராக இந்தப் படத்தின் கதையை வடிவமைத்துள்ளனர்.

தற்போது இருக்கும் சூழலில் சசிகுமார் நடிப்பில் அடுத்ததாக 'கொம்பு வச்ச சிங்கம்டா' படம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

28 mins ago

வணிகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

50 mins ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

23 mins ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்