ட்வீட்டாம்லேட்: புரிந்தால் உத்தமன்; புரியாவிட்டால் வில்லன்!

By க.பத்மப்ரியா

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியாகியிருக்கும் படம் 'உத்தம வில்லன்'.

வழக்கம்போல படத்துக்கு பல பிரச்சினைகள். கமல் படம் என்பதால் பிரச்சினைகளைத் தாண்டிய கூடுதல் எதிர்பார்ப்பும் இருந்தது. மே 1-ல் படத்தை பார்க்க குவிந்த ரசிகர்கள் கடும் ஏமாற்றத்துக்கு தள்ளப்பட்டனர்.

காத்திருந்து படத்தை பார்த்த ரசிகர்கள், படம் குறித்த குறும் விமர்சனங்களைத் தாண்டி, கமல்ஹாசன் குறித்த பார்வையை பதிவு செய்யும் வாய்ப்பாகக் கருதிக் கொண்டனர். அத்தகைய பதிவுகளின் தொகுப்பு - இன்றைய ட்வீட்டாம்லேட்டில்...

புத்திகாலி ‏@Tottodaing - உத்தம வில்லன் பார்த்துட்டேன். அது ஏன் கமல் சார் தசாவதாரம் மாதிரியே எடுத்து வெச்சிருக்காங்க..?!

ஙேயிச ரைட்டர் ‏@Rasanai - உத்தம வில்லன் படம் அட்டகாசம். சான்சே இல்லை. மிக செறிவான, தரமான அவுட்புட். அக்மார்க் #கமல் படம்.

சி.பி.செந்தில்குமார் ‏@senthilcp - கமல் படம் ஓடவில்லை எனில் இழப்பு கமலுக்கு அல்ல.அது மக்களின் ரசனைக்கான வீழ்ச்சி.

கருத்து கந்தன்© ‏@karuthujay - ரஜினிக்கு குசேலன்; கமலுக்கு உத்தமவில்லன் -//.

It's Parthi ‏@ivanparthiban - கமல் ரசிகர்களின் கனிவான கவனத்திற்கு.. இணையத்தில் ட்ரெண்ட் செய்யும் வயதை கடந்து காலாவதியாகிவிட்டீர்கள்.. அக்கப்போர்களை நிறுத்துங்கள்..

Karthik Pillai ‏@tm_karthik - கமல் படம் தோல்வி என்றால் க்ளாஸ் படம் என்று சொல்லிக் கொண்டு சமாளித்துக் கொள்ளவே ஒரு கூட்டம் அலையும்.

ட்விட்டர்MGR ‏@RavikumarMGR - 100% எல்லாருக்கும் பிடித்தமான படைப்பை கடவுளாலேயே தர முடியவில்லை!நம்மை எல்லோருக்கும் பிடிக்கிறதா என்ன! #உத்தமவில்லன் எஃபெக்ட்.

நாத்திகன் ‏@donrithik - கத்தி படத்த கத்திக்டே பாத்தவனுக்கு உத்தமவில்லன் எனும் உண்மையான நடிகன் படம் எப்பிடிடா புரியும் இன்னும் தெளிவா சொல்லனும்னா புளு ப்ரின்ட். #கமல்.

அவிநாசி ஜனாதிபதி ‏@srinivasaguruji - உத்தமவில்லன் பதினஞ்சு வருஷம் கழிச்சு புரியுமாம். விஸ்வரூபம் இன்னும் பத்து வருஷம் கழிச்சு புரியுமாம். நாயகனே போன வருஷம்தான் புரிஞ்சுதாம்.. #கமல் #உத்தமவில்லன்

ansari masthan ‏@ansari_masthan - தனக்கு தெரிந்ததை மக்களை பார்க்க திணிப்பவர் கமல் , மக்களுக்கு எது புடிக்கும் என பார்த்து பார்த்து முயற்சிப்பவர் ரஜினி !!!

உத்தம குமரன் ‏@deekay40 - மை கருத்து வாட் அயம் சேயிங் உத்தமவில்லன் ப்ளாப் ஆகக்கூடிய நல்லபடம்.. #ஹாஷ்டேக் கமல்

சி.சரவணகார்த்திகேயன் ‏@writercsk - கமல் ஹாசனின் இந்தப் பொறுப்பில்லாத்தனத்துக்குக் காரணம் மருந்துக்குக் கூட அவருக்குப் போட்டி என தமிழில் எவரும் இல்லை என்பது தான்!

Vijay ‏@maestrosworld - சாகாவரம் போல் சோகம் உண்டோ கேளாய் மன்னா, தீராக் கதையை கேட்பார் உண்டோ கேளாய் மன்னா. ரொம்ப நாள் கழித்து மனதிற்கு நிறைவான ஒரு படம் #உத்தமவில்லன்.

Sandy @Bottatto - எத்தனை பேர் கடினமான முயற்சிகள் எடுத்து தமிழ் சினிமாவை முன்னேற்ற முயற்சி கொண்டுள்ளனர் ? கமல்ஹாசன் என்றுமே தமிழகத்தின் பெருமையே.

RajaR ‏@Rajarath - கத்துக்குன மொத்த வித்தையும் இறக்கன படம் மாற்றான். சம்பாரிச்ச மொத்த சொத்தையும் விட்ட படம் உத்தமவில்லன்.

நேதாஜி ‏@surya_vn - கமல் படங்களை தியேட்டரில் கொண்டாட தவறிவிட்டு பின் டீவியில் போடும்போதெல்லாம் கொண்டாடித் தீர்ப்போமே... அதே வரிசையில் #உத்தமவில்லன் வரும்போல.

அச்சம் தவிர் ‏@rmbala - கமல்ஹாசன் செய்ய நினைக்கும் புதிய பரிசோதனை முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்றாலும் ராஜ்கமல் நிறுவனம் இதில் அதிக அளவில் ரிஸ்க் எடுப்பதில்லை.

லெக்தாதா ‏@LegDada - உங்க அதிகப்பிரசங்கித்தனத்த எங்களோட 200 ரூபாய பிடுங்கிதான் காமிக்கணுமா #உத்தமவில்லன்

muthusiva ‏@s_muthusiva - ரஜினி படம் 3 தடவை பாத்த அப்புறம் மொக்கைனு தோணும்..கமல் படம் 3 தடவைக்கு அப்புறம் தான் சூப்பர்னு தோணும்..

புத்திகாலி ‏@Tottodaing - குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதில் வல்லவர், கமல்ஹாசன்..

நாட்டுப்புறத்தான் ‏@naatupurathan - கமல் படத்தை ரசிக்கவே ஒரு கூறு வேணும்யா...!!! புரியுதா கூறு கெட்ட குப்பன்களா...!!! இதுல பாருங்க, கமல் நடிப்ப கிண்டல் பண்றவங்க யார்னு பாத்தா..விஜய் அவார்டு புகழ் தளபதி ரசிகர்ஸ்...நடிப்பு மேதை தல ரசிகாஸ்...!!!ஓடிருங்க!

சி.சரவணகார்த்திகேயன் ‏@writercsk - கமல் தன் பாதையை, தன் தரத்தைச் சுயபரிசீலனை செய்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான கட்டத்தில் இருக்கிறார். #UttamaVillain

உத்தம கதிர் ‏@Kathirru - கமல் போய் கே.பி கிட்ட எனக்கு கடைசியா ஒரு படம் பண்ணனும்ங்கறார், ஆனா கே.பிக்கு இதான் கடைசி படம்னு தெரியாம போய்டுச்சு #உத்தமவில்லன்

டுவிட்டர் அரசன் ‏@thamizhinii - 60 வயசுல நடிக்க வேண்டிய சமூதாய படங்களையெல்லாம் 30 வயசுல நடிச்சுட்டு 30 வயசுல நடிக்க வேண்டிய காதல் படங்களை இப்போ நடிச்சிட்டு இருக்காரு கமல்!

Sri Sri ravichan® ‏@2nrc - கமல் படம்னா புரியாதாம்!!! ஏன் எனக்கு 'கோவா' படம் கூடதான் புரீல "ஏன் எடுத்தாங்க"ன்னு!!!

புகழ் ‏@mekalapugazh - உத்தமன் படத்துக்கு வில்லன்... வில்லன் படத்துக்கு உத்தமன்..!

Yoda ‏@iamVariable - பிறரை அழித்து வாழ்பவன் அதமன் | பிறரும் வாழ,தானும் வாழனும்னு நினைப்பவன் மத்திமன் | பிறருக்காக தன்னையே அழித்துக்கொள்பவன் உத்தமன் | உத்தமவில்லன் !?

டீகிளாஸ் ‏@teakkadai - சில படங்கள்தான், வாழ்வில் செய்ய தவறியது, இனி செய்ய வேண்டியது என்ன என்பதை கோடிட்டு காட்டும். அப்படி ஒரு படம் தான் எனக்கு உத்தம வில்லன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

வாழ்வியல்

11 mins ago

ஓடிடி களம்

21 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

56 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்