தமிழகம் முழுவதும் விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்புக்குரிய படமாக 'காஞ்சனா 2' மாறியிருக்கிறது.
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் படம் 'காஞ்சனா 2'. டாப்ஸி, நித்யா மேனன், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார். முதல் பிரதி அடிப்படையில் லாரன்ஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
லாரன்ஸுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், இடையில் தடைப்பட்ட படப்பிடிப்பை தற்போது முழுவீச்சாக முடித்திருக்கிறார்கள். இந்த வாரம் சென்சார் செய்யப்பட்டு, ஏப்ரல் 17ம் தேதி வெளியிட தீர்மானித்திருக்கிறார்கள்.
விநியோகஸ்தர்கள் மத்தியில் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. பெரிய நடிகர்கள் படத்துக்கு வழங்கப்படும் முன்பண அடிப்படையில் இப்படத்தை வாங்க முன்வந்திருக்கிறார்கள்.
நீண்ட நாட்கள் கழித்து இப்படத்துக்கு முன்பண அடிப்படையில் படத்தை வாங்க முடிவு செய்திருப்பதால் தயாரிப்பு குழு மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
36 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
8 hours ago