ஜெயம் ரவி, லட்சுமி மேனனை இயக்கும் சக்தி சௌந்தர்ராஜன்

By செய்திப்பிரிவு

இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் புதிய படத்தில் 'ஜெயம்' ரவியும், லட்சுமி மேனனும் நடிக்கின்றனர்.

'நாணயம்', 'நாய்கள் ஜாக்கிரதை' ஆகிய படங்களை இயக்கியவர் சக்தி சௌந்தர்ராஜன். தற்போது தனது அடுத்த படத்தை இயக்குகிறார். மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

'ஜெயம்' ரவி ஹீரோவாக நடிக்கும் 19வது படம் இது. இப்படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இதில் ஹீரோயினாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இதை தன் ட்விட்டர் பக்கத்தில் சக்தி சௌந்தர்ராஜன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

'ஜெயம்' ரவியும், லட்சுமி மேனனும் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

'ஜெயம்' ரவி நடிப்பில் 'ரோமியோ ஜூலியட்', 'பூலோகம்','அப்பாடக்கர்','தனி ஒருவன்' ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. அதற்குப் பிறகு 'ஜெயம்' ரவி - லட்சுமி மேனன் இணையும் படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

22 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

45 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

கார்ட்டூன்

3 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்