பசங்களுக்காக பாண்டியராஜ் படைக்கிறார் ஹைக்கூ!

By ஸ்கிரீனன்

'இது நம்ம ஆளு' படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கி வரும் படத்துக்கு 'ஹைக்கூ' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'இது நம்ம ஆளு'. குறளரசன் இசையமைத்து வரும் இப்படத்தை பாண்டிராஜ் முதல் பிரதி அடிப்படையில் சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கு தயாரித்து கொடுக்கிறார்.

கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கும் இப்படத்துக்கு இன்னும் 2 பாடல்கள் படமாக்கப்பட இருக்கிறது. மார்ச்சில் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. தற்போது இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

'இது நம்ம ஆளு' படப்பிடிப்பின் போதே, இயக்குநர் பாண்டிராஜ் குழந்தைகள் சம்பந்தமான படம் ஒன்றை சூர்யாவின் 2டி நிறுவனத்திற்காக ஆரம்பித்தார். இப்படத்தில் குழந்தைகளுடன் பிந்து மாதவி நடித்து வருகிறார். சூர்யா மற்றும் அமலா பால் இப்படத்தில் கெளரவ வேடத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

பெயரிடப்படாமல் இருந்த அப்படத்துக்கு தற்போது 'ஹைக்கூ' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். இதனை இயக்குநர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

பாண்டியராஜ் தனது 'பசங்க' படத்தில் சிறுவர்களின் உலகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, ரசிகர்களையும் விமர்சகர்களையும் ஈர்த்தது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 secs ago

தமிழகம்

13 mins ago

சினிமா

42 mins ago

க்ரைம்

23 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

36 mins ago

தொழில்நுட்பம்

18 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்