இயக்குநராக நான் செய்த அபத்தங்கள்: இயக்குநர் வசந்தபாலன்

By ஸ்கிரீனன்

ஒரு சினிமா இயக்குநராக தான் செய்த அபத்தங்கள் என்னவென்று இயக்குநர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், ப்ருத்விராஜ், வேதிகா, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் 'காவியத்தலைவன்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. தற்போது தனது அடுத்த படங்கள் குறித்த விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் ஒரு சினிமா இயக்குநராக தான் செய்த அபத்தங்கள் என்னவெல்லாம் என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். அவர் கூறியிருப்பது

"ஒரு சினிமா இயக்குனராக நான் செய்த அபத்தங்கள்

1.ஒரு படத்தில் பாடல்கள் சூப்பர்ஹிட் ஆனாலே படம் ஓடிவிடும் என்று நம்பியது

2.திருப்பதிக்கு மொட்டை போடுவதாக வேண்டிக்கொண்டால் படம் ஓடிவிடும் என்று நம்புவது

3.படத்தின் கதை புது கதைக்களமாக இருந்தாலே படம் ஓடிவிடும் எனறு நம்புவது

4.நமக்கு சுக்கிரதிசை ஓடுகிறது அதனால் படம் ஓடிவிடும் என்று நம்புவது

5.ரகுமான் இசையமைத்தாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது

6.கஜ்முர் தர்காவுக்கு போய் வேண்டிக்கொண்டாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது

7.ராமசந்திர மிஷன் மாஸ்டர் அனுகிரகம் கிடைத்துவிட்டாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது

8.இசைவெளியீட்டு விழாவில் அனைவரும் படம் ஓடும் என்று கூறுகின்றனர் என்று நம்புவது

9.படம் பார்த்துவிட்டு ஜெயமோகன் u will win என்று குறுஞ்செய்தி அனுப்பினாலே படம் ஓடிவிடும் எனறு நம்புவது

10.என் மழலை மாறா குழந்தை அப்பா உங்க படம் ஹிட் என்று சொன்னவுடனே படம் ஓடிவிடும் என்று நம்புவது

11.உதவி இயக்குனர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு சார் அப்போகலிப்டோ எடுத்து விட்டீர்கள் என்று சொன்னவுடனே படம் ஓடிவிடும் என்று நம்புவது

12.முதல் இரண்டு படங்கள் ஓடிவிட்டதாலே அடுத்த படம் ஓடிவிடும் என்று நம்புவது

13.கையில் மந்திரித்த பச்சை கயிறு கட்டிக்கொண்டாலே திருஷ்டி போய் படம் ஓடிவிடும் என்று நம்புவது

14.'ன்'என்று முடியும் என்ற வார்த்தையில் தலைப்பு வைத்தாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது

15.படம் பரபரவென்று ஓடுகிறது இதனால் படம் ஓடிவிடும் என்று நம்புவது

16.படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் காட்சிகளை ரசிப்பதை வைத்து கொண்டே படம் ஓடிவிடும் என்று நம்புவது

17.சபரிமலைக்கு மாலை போட்டாலே படம் ஓடிவிடும என்று நம்புவது

18.தோரணமலை முருகன் கோவிலில் படப்பிடிப்பு எடுத்தாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது

19.ப்ரிவியு படம் பார்த்தவர்கள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது

20.சென்சார் அதிகாரிகள் பாராட்டியதற்காக படம் ஓடிவிடும் என்று நம்புவது

இப்படி நிறைய நம்பிக்கைகள் திரையுலகம் முழுக்க சுழன்று வருகின்றன. ஆனால் வெற்றி மட்டும் யார் கண்ணுக்கும் தெரியாத ஒரு மாய கனி” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

இந்தியா

9 mins ago

விளையாட்டு

59 mins ago

தமிழகம்

28 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்