ஒரே நாளில் வெளியாகிறதா அனேகன், காக்கி சட்டை?

By செய்திப்பிரிவு

தனுஷ் நடிப்பில் தயாராகி இருக்கும் 'அனேகன்' மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி இருக்கும் 'காக்கி சட்டை' ஆகிய இரண்டு படங்களும் பிப்ரவரி 13-ல் வெளியாகும் எனத் தெரிகிறது.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், அமைரா, கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'அனேகன்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. முதலில் டிசம்பர் 2014-ல் வெளியீடு, பிறகு பொங்கல் வெளியீடு என்று மாறியது. ஆனால், தற்போது பிப்ரவரி 13-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

துரை. செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'காக்கி சட்டை'. தனுஷ் தயாரித்திருக்கும் இப்படத்தின் தமிழக உரிமையை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் வாங்கியிருக்கிறது. டிசம்பர் 25ம் தேதி எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் தயாரித்த 'கயல்' வெளியானதால், இப்படத்தை வெளியிட முடியாமல் போனது.

இந்நிலையில், பிப்ரவரி 13-ம் தேதி தனுஷ் நடித்திருக்கும் 'அனேகன்' படம் வெளியாகும் அதே தேதியில், தனுஷ் தயாரித்து தாம் வாங்கியிருக்கும் 'காக்கி சட்டை' படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறதாம் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம்.

மொத்தத்தில் தனுஷிற்கு மிக முக்கியமான மாதமாக பிப்ரவரி அமையவிருக்கிறது. 6-ம் தேதி பால்கி இயக்கத்தி அமிதாப், அக்‌ஷரா ஹாசனுடன் இணைந்து நடித்திருக்கும் 'ஷமிதாப்' வெளியாகிறது. 13-ம் தேதி 'அனேகன்', அதே தேதியில் தான் தயாரித்த 'காக்கி சட்டை' என வெளியாக இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

29 mins ago

சினிமா

37 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்