விஷால் ஜோடியாக காஜல் அகர்வால்

By ஸ்கிரீனன்

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சுந்தர்.சி இயக்கத்தில் 'ஆம்பள' படத்தில் நடித்து வருகிறார் விஷால். ஹன்சிகா, வைபவ், சந்தானம், கிரண், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தை விஷால் தயாரித்து வருகிறார். இப்படத்தை பொங்கலுக்கு வெளியிடும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஷால். வேந்தர் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. முதலில் இப்படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார் லட்சுமி மேனன்.

இந்நிலையில், தற்போது லட்சுமி மேனனுக்கு பதிலாக காஜல் அகர்வால் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். 2015 பிப்ரவரியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

சுசீந்திரன் படத்தை முடித்துவிட்டு, லிங்குசாமி இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் விஷால்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

ஜோதிடம்

34 mins ago

ஜோதிடம்

49 mins ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்