காக்கி சட்டை வெளியீட்டு தேதி எப்போது?- நிலவும் குழப்பம்

By ஸ்கிரீனன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி இருக்கும் 'காக்கி சட்டை' எப்போது வெளியாகும் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.

'எதிர் நீச்சல்' இயக்குநர் துரை.செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'காக்கி சட்டை'. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார். தமிழ்நாட்டு திரையரங்க உரிமையை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் வாங்கியிருக்கிறார்.

டிசம்பர் 5ம் தேதி 'காக்கி சட்டை' இசை வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் இசையமைப்பாளர் அனிருத் வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடித்துவிட்டு வர தாமதமானாதால் தற்போது ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் 'காக்கி சட்டை' எப்போது வெளியீடு என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என்று பேச்சுக்கள் நிலவிவருகின்றன. ஆனால் இதற்கு வாய்ப்பில்லை என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். காரணம் என்னவென்று விசாரித்தால், "'காக்கி சட்டை' படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்திடம் இருக்கிறது. அந்நிறுவனத்தின் தயாரிப்பான 'கயல்' கிறிஸ்துமஸ் தின வெளியீடாக வரும்போது, மற்றொரு படத்தை எப்படி வெளியிடுவார்கள்" என்றார்கள்.

கிறிஸ்துமஸ் தின வெளியீடு இல்லை என்றால், அடுத்தாண்டு பொங்கலுக்கு 'ஐ', 'என்னை அறிந்தால்' மற்றும் 'ஆம்பள' ஆகிய படங்கள் வெளிவருகின்றன. இதனால் 'காக்கி சட்டை' எப்போது வெளியாகும் என்பதில் இன்னும் குழப்பம் நீடித்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்