வால்டர் அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் கெளதம் மேனன்

By ஸ்கிரீனன்

சிபிராஜ் நடிப்பில் உருவாகிவரும் 'வால்டர்' படத்தில், முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இயக்குநர் கெளதம் மேனன்.

புதுமுக இயக்குநர் அன்பரசன் இயக்கத்தில் சிபிராஜ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துவரும் படம் ‘வால்டர்’. இதன் படப்பிடிப்பு, கடந்த ஜூன் 14-ம் தேதி தொடங்கப்பட்டது. இதனை 11:11 புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

'வால்டர்' படம் தொடர்பாக சிங்காரவேலன் விடுத்த எச்சரிக்கையை, சமரசம் பேசி முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது படக்குழு. இதனைத் தொடர்ந்து முதற்கட்ட படப்பிடிப்பை எவ்விதத் தடையுமின்றி சுமுகமாக முடித்துள்ளது.

இதில், முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கெளதம் மேனன். முழுக்க முழுக்க காவல்துறையை மையப்படுத்தி உருவாகிவரும் படம் இது. இதில், கெளதம் மேனன் வில்லனாக நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், படக்குழுவினர் இதுவரை அதிகாரபூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.

'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் 'துருவ நட்சத்திரம்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் கெளதம் மேனன். இதற்கிடையே 'வால்டர்' படத்தில் நடிப்பது மட்டுமன்றி, தனது புதிய படத்துக்கான கதை விவாதத்திலும் ஈடுபட்டு வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

இந்தியா

12 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

31 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்