ஜீவாவின் கீ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By ஸ்கிரீனன்

புதுமுக இயக்குநர் காலீஸ் இயக்கத்தில் ஜீவா நடித்திருக்கும் 'கீ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தின் பணிகள் முடிவடைந்தவுடன், புதுமுக இயக்குநர் காலீஸ் இயக்கத்தில் உருவான படத்தில் நடிக்கத் தொடங்கினார் ஜீவா. மைக்கேல் ராயப்பன் தயாரித்து வந்தார்.

'கீ' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஜீவாவுடன் நிக்கி கல்ரானி, அனைகா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தது. தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விரைவில் இப்படம் வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

உலகம்

7 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்