விமர்சகர்களின் கருத்து தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது: தனுஷ்

By ஸ்கிரீனன்

'வேலையில்லா பட்டதாரி 2' படம் குறித்த விமர்சகர்களின் கருத்து தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தனுஷ் தெரிவித்துள்ளார்

'வேலையில்லா பட்டதாரி 2' படத்துக்கு வசூல் ரீதியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இது தொடர்பாக படக்குழுவினரும் நன்றி தெரிவித்துள்ளார்கள்.

'வேலையில்லா பட்டதாரி 2' வசூல் ரீதியில் வெற்றிடைந்திருப்பது குறித்து 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார் தனுஷ். அதில் "’வேலையில்லா பட்டதாரி 2’ விமர்சன ரீதியாக கலவையாக இருந்ததே. இதனை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்" என்ற கேள்விக்கு தனுஷ் கூறியிருப்பதாவது:

விமர்சகர்களின் கருத்து தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது பற்றி எனக்கு மகிழ்ச்சியே. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் முதல் பாகத்தோட ஒப்பீடு, கலவையான விமர்சனம் ஆகியவற்றுக்கு நான் தயாராகத்தான் இருந்தேன்.

'பவர் பாண்டி' படத்துக்கு அற்புதமான விமர்சனங்கள் வந்தன. அதைப் பார்த்தபோது சந்தோஷமாக இருந்தது. இப்போது கலவையான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு எனக்கு முதிர்ச்சி வேண்டும். நான் விமர்சகர்களின் கருத்தை மதிக்கிறேன். அதேநேரத்தில் விமர்சனம் செய்வதற்கு முன்னால் பொதுமக்களின் கருத்துகளையும் அவர்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு தனுஷ் தெரிவித்துள்ளார்.

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலா பால், கஜோல், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'வேலையில்லா பட்டதாரி 2'. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தை தனுஷ் மற்றும் தாணு இணைந்து தயாரித்திருந்தார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

37 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

கல்வி

9 hours ago

மேலும்