சென்னையில் முதல் நாள் வசூலைத் தாண்டியது 2-வது நாள் வசூல்: விவேகம் சாதனை

By ஸ்கிரீனன்

சென்னையில் முதல் நாள் வசூலைத் தாண்டி 2-வது நாளில் ரூ.1.51 கோடி வசூல் செய்து, 'விவேகம்' சாதனை புரிந்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் 'விவேகம்' பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியானது. சென்னையில் அதிகாலை 4 மணிக்கெல்லாம் சில திரையரங்குகளில் 'விவேகம்' திரையிடப்பட்டது.

சென்னையில் முதல் நாள் வசூலாக ரூ.1.21 கோடி வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது 'விவேகம்'. 'கபாலி', 'தெறி' ஆகிய படங்களின் முதல் நாள் சாதனையை முறியடித்து முதல் இடத்தைப் பிடித்தது.

இந்நிலையில் 2-வது நாளில் ரூ.1.51 கோடி வசூல் செய்து, முதல் நாள் வசூலை முறியடித்துள்ளது 'விவேகம்'.

சென்னையில் இதுவரை எந்த ஒரு தமிழ்த்திரைப்படமும் ஒரே நாளில் ரூ.1.5 கோடி வசூல் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் ஒரு நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு, பல்வேறு திரையரங்குகளில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டதால் இச்சாதனையை நிகழ்த்தியிருப்பதாக வியாபார நிபுணர்கள் தெரிவித்தார்கள்.

மேலும் வார விடுமுறை நாட்களிலும் டிக்கெட் முன்பதிவு பிரமாதமாக இருப்பதால், சென்னையில் முதல் வார வசூலாக ரூ.5 கோடி வரை வசூலிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கலவையான விமர்சனங்களை கடந்தும், நல்ல வசூல் செய்துவருவதாக தயாரிப்பாளர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

15 mins ago

இந்தியா

21 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

59 mins ago

கல்வி

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்