ஸ்கெட்ச் படப்பிடிப்பு நிறைவு: செப்டம்பரில் சாமி 2 படப்பிடிப்பு துவக்கம்

By ஸ்கிரீனன்

'ஸ்கெட்ச்' படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் முதல் 'சாமி 2'வில் கவனம் செலுத்தவிருக்கிறார் விக்ரம்.

விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஸ்கெட்ச்'. ஒரு பாடல் மற்றும் சில காட்சிகளை படமாக்க, இறுதிகட்ட படப்பிடிப்பு துவங்கப்பட்டது. தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

தமன்னா, ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் விக்ரமுடன் நடித்திருக்கிறார்கள். தமன் இசையமைப்பாளராக பணிபுரிந்து வரும் படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

தற்போது 'ஸ்கெட்ச்' படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 'துருவ நட்சத்திரம்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து 'சாமி 2' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்க படக்குழு முடிவு செய்துள்ளது.

கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, பிரபு, டெல்லி கணேஷ், ஜான் விஜய், சூரி மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் 'சாமி 2' படத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். டெல்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தவுள்ளார்கள்.

ஜனவரிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து, கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

தமிழகம்

12 mins ago

சினிமா

18 mins ago

கருத்துப் பேழை

8 mins ago

தமிழகம்

33 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்