5 நாட்களில் வேலையில்லா பட்டதாரி 2 வசூல் எவ்வளவு?- தாணு தகவல்

By ஸ்கிரீனன்

5 நாட்களில் 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் வசூல் நிலவரம் என்ன என்பதை அதிகாரபூர்வமாக தாணு வெளியிட்டார்.

'வேலையில்லா பட்டதாரி 2' திரைப்படம் வசூல் ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு. செளந்தர்யா ரஜினிகாந்த், தனுஷ், விவேக் மற்றும் தயாரிப்பாளர் தாணு ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இப்பத்திரிகையாளர் சந்திப்பில் 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் வசூலை அதிகாரபூர்வமாக தயாரிப்பாளர் தாணு வெளியிட்டு பேசியதாவது:

கடந்த 5 நாட்களில் இந்தப் படம் 33 கோடிக்கும் அதிகமாக வசூலித்து தனுஷ் படங்களின் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.

தமிழ்நாட்டில் விநியோக ஏரியா வாரியாக வசூல் நிலவரம்:

சென்னை, செங்கல்பட்டு – 6.70 கோடி

கோவை – 3.22 கோடி

மதுரை – 2.40 கோடி

திருச்சி – 2.10 கோடி

சேலம் – 1.95 கோடி

வட ஆற்காடு – 1.48 கோடி

தென்னாற்காடு – 1.65 கோடி

திருநெல்வேலி – 1.30 கோடி

கேரளா – 2.75 கோடி

வெளிநாடுகள் – 10 கோடி

மலேசியாவில் மட்டும் 5 நாட்களில் 5.30 கோடி ரூபாயும், அமெரிக்காவில் முதல் நாள் வசூலாக 1.48 கோடியும், சிங்கப்பூரில் முதல் நாள் வசூலாக 1.38 கோடியும் வசூலித்திருக்கிறது. மேலும் இதர ஏரியாக்களின் வசூல் நிலவரம் வந்துக் கொண்டிருக்கிறது.

வரும் 18ம் தேதி இப்படம் இந்தியில் சுமார் 1200 தியேட்டர்களிலும், 25-ம் தேதி தெலுங்கிலும் வெளியாக உள்ளது

இவ்வாறு தயாரிப்பாளர் தாணு தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

இந்தியா

29 mins ago

தமிழகம்

53 mins ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்