தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திரைப்பட தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: ‘காலா’ உட்பட 37 படங்களின் படப்பிடிப்பு ரத்து

By செய்திப்பிரிவு

தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) சார்பில் நேற்று வேலைநிறுத்தம் தொடங்கப் பட்டது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக் குச் செல்லாததால் ரஜினியின் ‘காலா’ உட்பட 37 படங்களின் படப் பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.

திரைப்பட தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்துக்கு பெப்சி காரணமல்ல. தயாரிப்பாளர்கள் சங்கம் சுமுக பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லாததுதான் பிரச் சினையை வளர்க்கிறது என்று அதன் தலைவர் ஆர்.கே.செல் வமணி குற்றம்சாட்டியுள்ளார்.

திரைப்பட தொழிலாளர்கள் சம்பளம் தொடர்பாக தயாரிப்பா ளர்கள் சங்கத்துக்கும், தென் னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளத்துக்கும் (பெப்சி) இடையே கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் உடன்பாடு ஏற்படாததால் ஆகஸ்ட் 1 முதல் பெப்சி தொழி லாளர்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அதன் தலைவர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்தார். ‘பெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும், திட்டமிட்டபடி படப்பிடிப்புகள் நடக்கும்’ என்று தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் துணைத் தலைவர் பிரகாஷ்ராஜ் அறிவித் தார்.

‘‘சம்பளம் தொடர்பான பெப்சியின் சில நிபந்தனைகள் நியாயமானதாக இல்லை. ஜிஎஸ்டி, டிக்கெட் கட்டணம் ஆகிய வற்றுக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்வதுபோல, சம்பளத்திலும் மாற்றம் செய்வதை பெப்சி ஏற்கவேண்டும். தயாரிப் பாளர்களுக்கு தங்கள் விருப்பப்படி ஊழியர்களை நியமித்துக்கொள்ள உரிமை உள்ளது’’ என்று அவர் கூறினார்.

இந்நிலையில், அறிவித்தது போலவே பெப்சி அமைப்பு நேற்று வேலைநிறுத்தத்தில் இறங் கியது. இதுதொடர்பாக நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியதாவது:

தயாரிப்பாளர்கள் சங்கம் சுமுக பேச்சுவார்த்தைக்கு வராததுதான் வேலைநிறுத்தத்துக்கு காரணமே தவிர, பெப்சி அமைப்பு அல்ல. இப்போதும் தயாரிப்பாளர்களுக்கு அனைத்து வகையிலும் ஒத்து ழைப்பு அளிக்கத் தயாராக இருக் கிறோம். கடந்த 7 நாட்களாகவே பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். ஆனால், எங்கள் கோரிக்கைகளை ஏற்று நல்ல முடிவை அறிவிக்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை. அதனால் தான் வேறு வழியின்றி வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளோம். பெப்சி அமைப்பில் உள்ள சில சங்கங்கள் மீது தயாரிப்பாளர் சங்கம் முன்வைக்கும் குற்றச்சாட்டு களை கேட்டோம். அதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இரு தரப்பு இடையே ஒரு குழு அமைத்து தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்றே நினைக்கிறோம்.

வேலைநிறுத்தத்தால் 10 ஆயிரத் துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை யில் ‘காலா’ படப்பிடிப்பு தொடங்கி திருநெல்வேலி, மதுரை என பல்வேறு இடங்களில் 37 படங் களின் படப்பிடிப்பு நடக்கவில்லை.

மூன்று கோரிக்கைகள்

‘பெப்சி அமைப்பினருடன் வேலை செய்ய மாட்டோம் என்ற முடிவை தயாரிப்பாளர்கள் சங்கம் திரும்பப் பெறவேண்டும். ஒப்புக்கொண்ட சம்பளத்தை குறைக்கக்கூடாது. பொது விதிகளை மதிக்க வேண்டும்’ என்ற எங்களது 3 கோரிக்கைகளை ஏற்க வேண்டும். ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இப்பிரச்சினைக்கு தீர்வுகாண முன்வந்து, இரு அமைப்பு சார்பில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை அரசிடமும் முன்வைக்க உள்ளோம். இவ்வாறு ஆர்.கே. செல்வமணி கூறினார்.

ரஜினி நடிக்கும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்துவந்தது. வேலைநிறுத்தம் காரணமாக நேற்று படப்பிடிப்பு நடக்கவில்லை. போதிய அளவில் தொழிலாளர்கள் வந்த பிறகுதான் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க முடியும் என்று படக்குழுவினர் கூறினர். வேலைநிறுத்தம் தொடங் கியபோதிலும், மிஷ்கின் இயக்கத் தில் விஷால் நடிக்கும் ‘துப்பறி வாளன்’ படத்தின் படப்பிடிப்பு சிதம்பரத்தில் நேற்று இடையூறின்றி நடந்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

39 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

மேலும்