தெலுங்கு உரிமை விற்பனையில் 2.0 சாதனை: லைகா நிறுவனம் தகவல்

By ஸ்கிரீனன்

ஆந்திரா மற்றும் தெலங்கானா உரிமை விற்பனையில் '2.0' படம் சாதனை புரிந்திருப்பதாக லைகா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

'2.0' படத்தின் இறுதி பாடல் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், ஜனவரி வெளியீடு என்பதால் படத்தின் உரிமை விற்பனையில் தீவிரம் காட்டி வருகிறது தயாரிப்பு தரப்பு. தற்போது ஆந்திரா மற்றும் தெலங்கானா உரிமை விற்பனை குறித்து லைகா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கம், "’2.0’ - ஆந்திரா மற்றும் தெலங்கானா உரிமைகள் அதிக விலைக்கு விற்கப்பட்டுவிட்டன. லைகா நிறுவனம் மற்றும் க்ளோபல் சினிமாவின் கூட்டு, வரலாறு படைக்கவுள்ளது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துவரும் படம் '2.0'. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சுமார் ரூ.400 கோடி பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

முழுக்க 3டி தொழில்நுட்ப முறையில் இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டு வரும் முதல் படம் '2.0' என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

ஓடிடி களம்

22 mins ago

விளையாட்டு

37 mins ago

சினிமா

39 mins ago

உலகம்

53 mins ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

42 mins ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்