சிவாஜி சிலையை அகற்றிய விவகாரம்: நடிகர் சங்கச் செயற்குழுவில் தீர்மானம்

By ஸ்கிரீனன்

சிவாஜி சிலை அகற்றம் விவகாரம் தொடர்பாக நடிகர் சங்கச் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையிலிருந்த சிவாஜி சிலையை அகற்றி, அதனை சிவாஜி மணி மண்டபத்தில் நிறுவி இருக்கிறது தமிழக அரசு. சிவாஜி சிலை அகற்றப்பட்டதற்கு கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்கள். மேலும் தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் இயக்குநர்கள் சங்கம் சிவாஜி சிலை மீண்டும் மெரினாவிலேயே நிறுவிட தமிழக அரசு வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகர் சங்கத்தின் செயற்குழு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் சிவாஜி கணேசன் சிலை அகற்றம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அதில் காமராஜர் சிலை அருகிலோ அல்லது பொது மக்கள் அதிகமாக கூடும் இடத்திலோ சிவாஜி கணேசன் உருவ சிலையை நிறுவ வேண்டும் என்ற வேண்டுகோளைத் தீர்மானமாக நிறைவேற்றி இருக்கிறார்கள். மேலும், அதே தீர்மானத்தை தமிழக அரசிடம் கடிதமாக கொடுப்பதெனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சிவாஜி கணேசன் சிலை விவகாரம் தொடர்பாக குரல் கொடுத்த தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் இயக்குநர்கள் சங்கத்திற்கு நன்றியும் தெரிவித்துள்ளது நடிகர் சங்கம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

இந்தியா

24 mins ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்