ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகிறது வேலையில்லா பட்டதாரி 2

By ஸ்கிரீனன்

தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'வேலையில்லா பட்டதாரி 2' திரைப்படம் ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்தாலும், ஜூலை 28-ம் தேதி வெளியீட்டிலிருந்து பின்வாங்கியது 'வேலையில்லா பட்டதாரி 2'. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியீடு என்பதால் சரியான தேதிக்காக காத்திருந்தது.

தற்போது ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகும் என தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை தனுஷ் மற்றும் தாணு இணைந்து தயாரித்திருக்கிறார். சமுத்திரக்கனி, அமலா பால், கஜோல், விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

'வேலையில்லா பட்டதாரி 2' பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அடுத்து எந்த படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் தனுஷ் என்பது விரைவில் தெரியவரும். 'வடசென்னை' படத்தில் கவனம் செலுத்துவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

43 mins ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

சுற்றுலா

10 hours ago

வாழ்வியல்

10 hours ago

வாழ்வியல்

10 hours ago

மேலும்