கேடி பில்லா கில்லாடி ரங்கா பாணியில் பிஸ்தா: சிரிஷ் தகவல்

By ஸ்கிரீனன்

'கேடி பில்லா கில்லாடி ரங்கா' பாணியில் உருவாகும் படமே 'பிஸ்தா' என்று நாயகன் சிரிஷ் தெரிவித்தார்.

'மெட்ரோ' படத்தைத் தொடர்ந்து தரணீதரன் இயக்கத்தில் 'ராஜா ரங்குஸ்கி' படத்தில் நடித்து வருகிறார் சிரிஷ். அப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பரில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

தற்போது 'பிஸ்தா' என்ற பெயரில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சிரிஷ். 'மெட்ரோ' படத்தில் எடிட்டராக பணிபுரிந்த ரமேஷ் பாரதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.

'பிஸ்தா' குறித்து சிரிஷ் கூறியிருப்பதாவது:

ஒரு அருமையான கிராமத்தை மையமாகக் கொண்ட  காமெடி படத்தில் நடிக்கவுள்ளேன். 'மெட்ரோ' படத்தின் எடிட்டர் ரமேஷ் பாரதி இப்படத்தை இயக்கவுள்ளார். 'மெட்ரோ' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து கொண்டு இருந்த போதே ஒரு கதையை தயார் செய்துகொண்டிருந்தார். அந்தக் கதையை என்னிடம் கூறியது மிகவும் ஈர்த்தது.

சந்தையில் வேலை செய்யும் கதாபாத்திரம் என்னுடையது. இப்படத்திற்கு 'பிஸ்தா' என பெயரிட்டுள்ளோம். ஏன் இந்தத் தலைப்பு என்பதை வரும் தினங்களில் மக்கள் அறிவார்கள். 'அயல் ஜனல்லா' என்ற மலையாளப் படத்தில் நடித்து புகழ் பெற்ற மிருதுளா முரளி நாயகியாக நடிக்கவுள்ளார். 'சைத்தான்' படத்தில் நடித்த அருந்ததி நாயர் மற்றோரு நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு தரன் இசையமைக்கவுள்ளார்.

’கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் பாணியில் இப்படத்தின் கதைக்களம் இருக்கும். இது காமெடி கதை என்பதால் துணை நடிகர்களுக்கு பெரும் முக்கியத்துவமுள்ளது. சதிஷ், யோகி பாபு மற்றும் செண்ட்ராயன் ஆகியோர் இக்கதையில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். கும்பகோணம் மற்றும் காரைக்குடி பகுதிகளில் படமாக்கவுள்ள 'பிஸ்தா' வின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

'பிஸ்தா ' காதல் மற்றும் காமெடி கலந்த கொண்டாட்டமாக இருக்கும் . இது இசையமைப்பாளர் தரணின் 25வது படமாகும்.

இவ்வாறு சிரிஷ் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

இந்தியா

36 mins ago

சினிமா

53 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

கல்வி

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

13 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

மேலும்