ரஜினி - ரஞ்சித் பட அப்டேட்: முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி ஒப்பந்தம்

By ஸ்கிரீனன்

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தில், முக்கிய கதாபாத்திரத்துக்கு சமுத்திரக்கனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'2.0' படத்தைத் தொடர்ந்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. தனுஷ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னையில் மும்பை தாராவி பகுதிகளை அரங்குகளாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஹியூமா குரேஷி நாயகியாக ஒப்பந்தமாகியுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.

மும்பையில் முதற்கட்ட படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சென்னையில் நடைபெறவுள்ள படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொள்ளவுள்ளார். மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்துக்கு சமுத்திரக்கனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது எடிட்டர் மற்றும் இதர நடிகர், நடிகைகள் தேர்வை துரிதப்படுத்தியுள்ளது படக்குழு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

கல்வி

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்