பிப்ரவரி முதல் வாரத்தில் விஜய் - அட்லீ படப்பிடிப்பு தொடக்கம்

By ஸ்கிரீனன்

சென்னையில் பிப்ரவரி முதல் வாரத்தில், அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

'பைரவா' படத்தைத் தொடர்ந்து, அட்லீ இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. படப்பிடிப்பு தொடங்குவதற்காக அனைத்து பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

காஜல் அகர்வால், சமந்தா, ஜோதிகா, வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, கோவை சரளா, சத்யன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். சத்யராஜை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகவும், ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவாளராகவும், ஆண்டனி ரூபன் எடிட்டராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் பிப்ரவரி முதல் வாரத்தில் துவங்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் சில முக்கிய காட்சிகளை காட்சிப்படுத்த செல்லவுள்ளது படக்குழு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்