பிச்சைக்காரன் இந்தி ரீமேக் பேச்சுவார்த்தை தொடக்கம்

By ஸ்கிரீனன்

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'பிச்சைக்காரன்' படத்தின் இந்தி ரீமேக் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

விஜய் ஆண்டனி, சாத்னா டைட்டஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பிச்சைக்காரன்'. சசி இயக்கத்தில் வெளியான இப்படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்து தயாரித்திருந்தார். மார்ச் 2016ல் வெளியான இப்படம் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது.

தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான படம், அங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது 'பிச்சைக்காரன்' படத்தின் இந்தி ரீமேக் செய்யும் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு இருக்கிறது.

முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இதற்கான பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கிறது. இயக்குநர் சசியிடமே இந்தி ரீமேக்கை இயக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

அப்படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. விஜய் ஆண்டனியை இந்தியிலும் நாயகனாக அறிமுகப்படுத்தலாமா என்ற தீவிர ஆலோசனையில் இறங்கியிருக்கிறது தயாரிப்பு நிறுவனம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

36 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்