மக்கள் மனதில் நின்ற மெல்லிசை மன்னருக்கு ட்விட்டராஞ்சலி

By க.பத்மப்ரியா

இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளரும், 'மெல்லிசை மன்னர்' என்று போற்றப்படுபவருமான எம்.எஸ்.விஸ்வநாதனின் மறைவுக்கு ட்விட்டரில் புகழஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

அதிகாலை தொடங்கியே >#RIPMSV என்ற ஹேஷ்டேக் மூலம் தெரிவிக்கப்பட்டு வரும் இரங்கல் குறிப்புகளும் புகழஞ்சலிகளும் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முன்னிலை வகிக்கிறது.

தமிழ் திரையுலகின் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படும் எம்.எஸ்.விஸ்வநாதன் உடல் நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானார்.

தனது மெல்லிய இசையால் ரசிகர்களைக் கவர்ந்த எம்.எஸ்.வி. மறைவுக்கு ட்விட்டர் உலகம் செலுத்தி வரும் புகழஞ்சலிகளில் சில:

'...jotha...' ‏@tha_karthick - உன் மெல்லிசையால் நான் உறங்கிய நாட்கள் பல. இன்று நீயோ உறங்கிப்போனாய். உன்னை தாலாட்ட என் நினைவுகள் உன்னை சேரும்! #RIPMSV.

Vivekh actor ‏@Actor_Vivek - அய்யா! உங்கள் தசை பயணம் நின்று இருக்கலாம்; ஆனால் இசை பயணம் தொடரும்! ஒரு மாபெரும் இசை சாம்ராஜ்யம் சரிந்து விட்டது!! விஸ்வ "நாதம்"!

ஜிரா GiRa ‏@RagavanG - குறில் குறிலாகவும் நெடில் நெடிலாகவும் எப்பவும் இருந்தது #எம்எஸ்வி இசைல மட்டுந்தான். அப்படி இல்லாத மத்தவங்க பாட்டு நிறைய.

#RIPMSV :( ‏@Arunvijith - எம்.எஸ்.வி. என்றால் என் நினைவில் நிற்பது, காற்றுக்கு ஓய்வென்பது ஏது அட ஏது, கலைக்கொரு தோல்வி கிடையாது கிடையாது #RIPMSV.

மகிழ்வரசு ThePatriot ‏@Anandraaj04 - ஜகமே தந்திரம், சுகமே மந்திரம், மனிதன் எந்திரம் சிவ சம்போ. நெஞ்சம் ஆலையம், நினைவே தேவதை, தினமும் நாடகம் சிவ சம்போ #RipMSV.

காளையன் ‏@Aruns212 - அவர் 'பாட்டுக்கு' வந்தார்; அவர் பாட்டுக்குப் போய் விட்டார் #RIPMSV

நையாண்டி நாரதர் ‏@NaiyaandiNarath - மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே, வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலையன்னமே

ansari masthan ‏@ansari_masthan - இசை சக்கரவர்த்தி ஐயா ,, காலம் உங்களின் தாலாட்டுகளை சுவாசித்தபடிதான் இருக்கும்...என்றென்றும் உயிரோடு #RIPmsv.

S'Pore Premkumar ‏@singaporeprem79 - கவிஞரே! உங்கள் வரிகளுக்கு இசையமைத்து தெய்வங்களுக்கு சமர்ப்பிக்க இவரையும் அங்கே அழைத்துக்கொண்டீரோ?! MSV ஆத்மாவும் அங்கே அமைதிபெறட்டும்! #RIPmsv.

ர.விவேக் ‏@VivekChandran07 - நதி நதி அத்தனையும் கடலில் சங்கமம், நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம், கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம் #RIPMSV.

சப்பாணி ‏@manipmp - தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளவரை உன் புகழ் இருக்கும்.அப்பாடலுக்கு இசையமைத்த பெருமை #RIPMSV.

Thadeus Anand ‏@thadeus_anand - கடந்த 34 ஆண்டுகளில் கண்ணதாசன் எக்கச்சக்கமாக எழுதிக் குவித்ததற்கெல்லாம் இன்றுமுதல் இசையமைக்கவேண்டிய இனிய வேலை எம்எஸ்வி அவர்களுக்கு. #RIPMSV.

புகழ் ‏@mekalapugazh - பிடித்தெழுத முடியாத சிறு பென்சில் அருமையை காணாமல் போனால்தான் உணரும் நம் மனம்..மேதைகளுக்கு அதிகமாய்தான் உருகும்.. #எம்எஸ்வி.

N. Sankar ‏@sankar100382 - இசை சாம்ராஜ்யத்தில் மாபெரும் சாதனைகள் படைத்த சாதனையாளர்.... உடலால் மறைந்தாலும்.. காலத்தால் அழிக்க முடியாது அவர்கள் நினைவுகளை...M.S.விஸ்வநாதன்.

2G எஸ்Ra® ‏@hsejarsa - வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நின்றவர் யார்? இறைவனடி சேர்ந்த எம்எஸ் விஸ்வநாதன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.

இளநி வியாபாரி ‏@MrElani - ஆஸ்கர் வாங்குனதுக்கு பாராட்டு விழாவுல ரகுமானுக்கு ரெண்டு பேர் முத்தம் குடுத்தாங்க. ஒன்னு ஜானகிம்மா இன்னொன்னு எம்எஸ்வி.

nambi rajan ‏@mrnambirajan - இசை மேதை எம்.எஸ்.விஸ்வநாதன். ஓயாது உழைத்து உலகை மகிழ்வித்த அன்னார் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்..

வெங்கி ‏@VenkysTwitts - நான் மெஸ்ஸு கிஸ்ஸு ரெண்டும் கண்ட விஸ்வநாதன்டா, அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா.. மெஸ்ஸு விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா #RIPMSV.

தாய்மனம் ‏@Thaaymanam - இசைதெய்வம் விஸ்வநாதன். இன்னொருவர் இவர் போல இல்லை. தன்னம்பிக்கையில் இவர் இமயம். தன்னடக்கத்தில் இவர் இமயத்தின் சிகரம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்