நடிகர் விக்ரம் மகள் நிச்சயதார்த்தம்: கருணாநிதி வாழ்த்து

By செய்திப்பிரிவு

நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதா - கெவின் கேர் குழுமத்தின் நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித் ஆகிய இருவரின் நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றது. இதில் கருணாநிதி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அக்‌ஷிதாவுக்கும், மனு ரஞ்சித்துக்கும் நேற்று (ஜூலை 10-ம் தேதி) சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமண நிச்சயத்தார்த்தம் நடைபெற்றது.

கெவின் கேர் குழுமத்தின் நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித். இவரது தாயார் தேன்மொழி, திமுக தலைவர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நிச்சயதார்த்த விழாவில் திமுக தலைவர் கருணாநிதி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இவ்விழாவில் திரையுலகைச் சார்ந்த பிரபலங்கள் கலந்து கொள்ளவில்லை. இருவரின் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர்.

அடுத்த ஆண்டில் திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்கு மொத்த திரையுலகினரையும் அழைக்க விக்ரம் திட்டமிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மாவட்டங்கள்

10 secs ago

உலகம்

5 mins ago

தமிழகம்

10 mins ago

தொழில்நுட்பம்

35 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

50 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மாவட்டங்கள்

1 hour ago

மேலும்