கான் விழாவில் போஸ்டர்கள்: விரைவில் தொடங்கப்படுகிறதா மருதநாயகம்?

By ஸ்கிரீனன்

கான் திரைப்பட விழாவில் 'மருதநாயகம்' படத்தின் போஸ்டர்கள் இடம்பெற்றிருப்பதால், விரைவில் தொடங்கப்படும் என தெரிகிறது.

1997-ஆம் ஆண்டு கமல்ஹாசனின் தயாரிப்பு, இயக்கம் மற்றும் நடிப்பில் ஆரம்பமான படம் ’மருதநாயகம்’. இந்தப் படத்தின் துவக்க விழாவுக்கு ராணி எலிசபத்தை வரவழைத்து பிரம்மாண்டமான முறையில் துவக்க விழாவை கமல் நடத்தியிருந்தார். ஆனால் அதிக பொருட்செலவு காரணமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நின்று போனது.

தொடர்ந்து அவ்வபோது ’மருதநாயகம்’ படம் மீண்டும் துவக்கப்படுவதைப் பற்றி கமல்ஹாசனும், அதை ஆவலோடு எதிர்நோக்கும் ரசிகர்களும் பேசி வருகின்றனர். "லண்டனில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். ஒரு திரைப்பட தயாரிப்பாளர். அவர் மருதநாயகத்தை தயாரிக்க தயாராக இருக்கிறார். படத்தை எப்போது துவங்கவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்போது என்னை அழையுங்கள்" என்று கமல் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது பிரான்ஸில் நடைபெற்று வரும் கான் திரைப்பட விழாவில் 'மருதநாயகம்' படத்தின் போஸ்டர்கள் இடம்பெற்றிருக்கிறது. புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள படங்களின் செய்திகள், போஸ்டர்கள் ஆகியவை கான் திரைப்பட விழாவில் இடம்பெறும். அந்த வரிசையில் 'மருதநாயகம்' படத்தின் போஸ்டர்களும் இடம்பெற்றிருப்பதால், விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என தெரிகிறது.

சுந்தர்.சி இயக்கத்தில் ஸ்ருதிஹாசன், ஜெயம் ரவி, ஆர்யா நடிக்கும் 'சங்கமித்ரா' படத்தின் தொடக்க விழா கான் திரைப்பட விழாவில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்