தமிழ் திரைப்பட வர்த்தக சபை தொடங்கப்பட்டது ஏன்? - அபிராமி ராமநாதன் விளக்கம்

By ஸ்கிரீனன்

தமிழ் திரைப்பட வர்த்தக சபை தொடங்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக அபிராமி ராமநாதன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் அங்கம் வகிக்கும் தமிழ் திரைப்பட வர்த்தக சபை நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக அபிராமி ராமநாதன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

தமிழ் திரைப்பட வர்த்தக சபை தொடங்கப்பட்டதற்கான காரணம் குறித்து அபிராமி ராமநாதனிடம் கேட்ட போது, "ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலுமே திரைப்பட வர்த்தக சபை உள்ளது. தமிழகத்தில் மட்டுமில்லை. இந்த மாதிரி ஒரு அமைப்பு இருந்தால்தான் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என ஒட்டுமொத்தமாக உறுப்பினர்களாக இருப்பார்கள். ஆகவே கூட்டமைப்பாக மாறிவிடும். இதுவரை கூட்டமைப்பு என்பது தமிழ் திரையுலகில் இல்லாமல் இருந்தது.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை என்பது 4 மாநிலங்களை உள்ளடக்கியது. அதில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்தவர் தலைவராக இருப்பார். அது ஒட்டுமொத்தமாக மத்திய அரசை வலியுறுத்துவதற்காக உள்ளது. அதில் தனிப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது. தமிழ் திரையுலகில் வரும் பிரச்சினைகளுக்கு இந்தக் கூட்டமைப்பு ஒன்றுகூடி தீர்வு காணும். அனைவருமே உறுப்பினர்களாக இருப்பதால், சுலபமாக தீர்வு காண முடியும்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சுற்றுலா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்