யு சான்றிதழ் பாபநாசம் படத்துக்கு வரிவிலக்கு மறுத்தது ஏன்?

By ஸ்கிரீனன்

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'பாபநாசம்' படத்துக்கு தமிழக அரசு வரிவிலக்கு வழங்க மறுத்துவிட்டது.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல்ஹாசன், கெளதமி, ஆஷா சரத், ஆனந்த் மகாதேவன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'பாபநாசம்'. விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியில் இப்படத்துக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது.

'பாபநாசம்' படத்தைப் பார்த்த வணிக வரித்துறை அதிகாரிகள், இப்படத்துக்கு வரிவிலக்கு கிடையாது என்று மறுத்துவிட்டார்கள். தற்போது தினமும் வரும் வசூலில் 30% வரி செலுத்தி வருகிறது படக்குழு.

'பாபநாசம்' படத்துக்கு ஏன் வரிச்சலுகை கிடையாது என்பதற்கு, அரசு சார்பிலான குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் குறிப்பிட்ட காரணங்கள் இவை:

"ஆபாசம் மற்றும் பிறமொழி இல்லாத திரைப்படம் என்றாலும், கதாநாயகன் கை விரல்களை ஒடிப்பது பார்க்க முடியவில்லை என்பதாலும், பள்ளி மாணவியை அடித்து கொடுமை பண்ணுவது பரிதாபமாக உள்ளது என்பதாலும், காவல் துறையினர் அதிகமாக கொடுமைப்படுத்துவதாக காண்பிப்பது சரியில்லை என்பதாலும், பள்ளி மாணவியை குளிக்கும்போது படம் பிடித்து காண்பிப்பது சரியில்லை என்பதால் இப்படம் வரிவிலக்குக்கு தகுதியானதல்ல.

மேலும், ஒரு பள்ளி மாணவர் ஒரு மாணவியை நிர்வாணமாக படம் எடுப்பதும் அதைக் காண்பித்து அந்த மாணவர் அவளை பயமுறுத்தி கெடுக்க நினைப்பது, உண்மையை வரவழைக்க காவலர்கள் கதாநாயகரின் குடும்பத்தை அடித்து உதைப்பது மிகவும் வேதனையாக உள்ளது.

இம்மாதிரி காட்சிகள் அகற்ற வேண்டும் என்றும், குற்றம் செய்தவர் தண்டனை அனுபவிக்க வேண்டும் என குறிப்பிட்டு வரிவிலக்கு அளிக்க மறுக்கிறோம்" என்று படம் பார்த்த தமிழக அரசு சார்ந்த குழு தெரிவித்திருக்கிறது.

பாபநாசம் திரைப்படத்துக்கு மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு 'யு' சான்றிதழ் வங்கியிருப்பது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

ஜோதிடம்

17 mins ago

ஜோதிடம்

32 mins ago

ஜோதிடம்

45 mins ago

வாழ்வியல்

50 mins ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்