தமிழில் 5 படங்களில் நாயகியாக நடிக்கும் அமலாபால்

By செய்திப்பிரிவு

தமிழில் 'வேலையில்லா பட்டதாரி 2', 'திருட்டு பயலே 2' உள்ளிட்ட 5 படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் அமலா பால்.

கன்னடத்தில் கிருஷ்ணா இயக்கத்தில் சுதீப், அமலா பால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஹெப்புலி'. இப்படம் 100 கோடி வசூலைக் கடந்து தற்போது அதிகமான திரையரங்குகளில் ஒடிக் கொண்டிருக்கிறது.

தமிழ், மலையாளம், கன்னடம் என பலமொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார் அமலா பால். தமிழில் மட்டும் சுமார் 5 படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். 'வேலையில்லா பட்டதாரி 2', 'திருட்டு பயலே 2', 'மின்மினி', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' மற்றும் பெயரிடப்படாத ஒரு புதிய படம் ஆகியற்றில் நடித்து வருகிறார்.

மலையாளத்தில் 'குயின்' ரீமேக்கில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதனைத் தொடர்ந்து 'அச்சாயன்ஸ்' படத்திலும் மற்றுமொரு பெயரிடப்படாத த்ரில்லர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அமலா பால்.

தமிழ் மற்றும் மலையாளத்தில் பெரும் எதிர்பார்ப்போடு இருக்கும் படங்களில் நாயகியாக நடித்து வருவதால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் அமலா பால்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

கல்வி

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்