வட அமெரிக்காவில் வசூல்: தென்னிந்திய சினிமாவில் கபாலி 2-ம் இடம் பிடித்து சாதனை

By ஐஏஎன்எஸ்

ரஜினி நடிப்பில் அதிக எதிர்பார்ப்போடு வெளியாகியுள்ள 'கபாலி' படம், வட அமெரிக்காவில் வெளியான இரண்டே நாட்களில் 3.5 மில்லியன் டாலர்களை (சுமார் ரூ.23.5 கோடி) வசூலித்துள்ளது.

'கபாலி' படத்தை அமெரிக்கா மற்றும் கனடாவில், 'சினிகேலக்ஸி இன்க்' என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் துணை நிறுவனர் கூறும்போது, ''3.5 மில்லியன் டாலர்கள் வசூலோடு 'கபாலி' அதிக வருமானம் ஈட்டிய தமிழ்ப் படமாகவும், அந்த பட்டியலில் 'பாகுபலி'க்கு அடுத்த இரண்டாவது தென்னிந்தியப் படமாகவும் இருக்கிறது.

படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும், வசூல் அனைத்து அரங்குகளிலும் அதிகமாகவே இருக்கிறது'' என்று தெரிவித்தார்.

'கபாலி' படம் மலேசியாவில் தமிழர்களுக்கு சம உரிமை கோரிப் போராடும் கேங்க்ஸ்டர் ஒருவரின் வாழ்க்கையையும், அதனால் பாதிக்கப்படும் அவரது சொந்த வாழ்க்கையையும் காட்சிப்படுத்துகிறது.

'கபாலி' படத்தை வெளியிட்டுள்ள 'சினிகேலக்ஸி இன்க்' நிறுவனம், இந்த ஆண்டில் விஜய்யின் 'தெறி', சூர்யாவின் '24' ஆகிய படங்களை வெளிட்டுள்ளது.

உலகம் முழுக்க சுமார் 5000 திரை அரங்குகளில் வெளியான 'கபாலி', மூன்று நாட்களில் சுமார் ரூ.150 கோடி வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

மேலும்