கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் மகள் அக்சரா

By செய்திப்பிரிவு

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் விக்ரம் நடிப்பில் தனது தயாரிப்பு நிறுவனம் எடுக்கும் புதிய படத்துக்கான வேலைகளையும் தொடங்கியுள்ளார் கமல். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் டிரைடென்ட் ஆர்ட் ரவி தயாரிக்கிறார். ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. ஜிப்ரான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். கமல்ஹாசனின் இளைய மகள் அக்சராஹாசன் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். இதற்கிடையே ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி முடிந்ததும், தான் பாதியில் நிறுத்தியுள்ள ‘சபாஷ் நாயுடு’ படத்தை தொடங்கும் எண்ணமும் கமலுக்கு இருக்கிறது என்றும் அவரது தரப்பில் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

உலகம்

10 hours ago

வாழ்வியல்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்